ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார் மீராகுமார்

சென்னை:

எதிர்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் இன்று மாலை சென்னை வந்தார்.

எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்த மீராகுமாரை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் மீராகுமார் ஆதரவு கோரினார்.