டொனால் டிரம்ப்
டொனால் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சில மக்களுக்கும், குழந்தைகளாக அமெரிக்க விற்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டவர்களுக்கும் சட்ட அந்தஸ்து கொடுக்கும் மற்றும் குடியுரிமை வழங்கும் விதமாக குடியேற்ற சட்டம் இயற்றத் தன் அரசாங்கம் தயாராகவே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸில் தன்னுடைய உரை நிகழ்த்துவதற்கு முன்பாக, செய்தியாளர்களுடன் மதிய உணவு சாப்பிடுகையில், “ இருபுறமும் சமரசம் செய்து உடன்படிக்கைக்கு தயாரென்றால் “குடிவரவு மசோதா” இயற்றச் சரியான நேரம் இது” என்று கூறினார்.
அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லையில் ஒரு சுவர் கட்டி அகதிகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதை தடுக்கப்போவதாக உறுதியளித்து டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பதவிக்கு வந்ததிலிருந்து, டிரம்ப்பின் கொள்கை நடவடிக்கைகள் சில அவரின் தேர்தல் வாக்குறுதிகளை ஒத்தே இருந்தன. உதாரணத்திற்கு, உள்நாட்டு பாதுகாப்பு துறையின் புதிய வழிகாட்டல் படி, குடியேறியவர்கள்மீது எந்தக் குற்றச்சாட்டு பதியப்பட்டாலோ, தண்டனைப்பெற்றாலோ, அபராதம் விதிக்கப்பட்டாலோ அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வழிவகை செய்யப்பட்டது.
ஆனால் அதிபர் டிரம்ப் சட்டவிரோதமாக குழந்தைகளாக அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டுபிடிக்கத் திறந்தமனதுடன் உள்ளதாகக் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒபாமா குடியேறியவர்களை நாடுகடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பதாக்க் கூறிய நிர்வாக நடவடிக்கைகள் எதிராக வசைபாடியிருந்தாலும், டிரம்ப் குடியேறியவர்களை அகற்றுவதில் ஈடுபடவில்லை. தனக்கு மற்ற முக்கியப்பணிகள் செய்ய முன்னுரிமைகள் உள்ளன என்றார்.

இந்த மாத ஆரம்பத்தில், ஒரு வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், டிரம்ப் “ அமெரிக்காவில் குடியேற வேண்டுமெனக் கனவுகாண்பர்களை “பெரிய மனதுடன் கையாள்வேன் ” என்று கூறினாலும், அவரது நிர்வாகத்தின் கொள்கை என்ன, எப்படி செயல்படுத்த போகின்றார் என்பதை கூறவில்லை.
டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை “மென்மைப்படுத்த எப்பொழுதும் தயாராக இருப்பதாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிவந்தார். எனவே ஒரு எளிமையான குடியேற்ற கொள்கை கொண்டு வருவேன் எனக் கூறிவந்தார்.

கடைசியில், அவர் துவங்கிய இட்த்திற்கே வந்தது சேர்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு உரையில் அவர் ஆட்சிக்கு வந்தால் ” சட்டவிரோதமாக எங்கள் நாட்டில் நுழைபவர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அல்லது அமெரிக்காவின் குடிமகனாகும் வாய்ப்பு முஇற்றிலும் மறுக்கப் படும்.” என்று கூறி வந்தார். தற்போது அந்த நிலைப்பட்டிற்கு தன்னை கீழிறக்கி உள்ளார். நீதிமன்றமும், மக்கள் எழுச்சியுமே அவரின் இந்த மனமாற்றத்திற்கு காரணம்.

ஒபாமாவின் மறு தேர்தல் பிரச்சாரத்தில் குடியேற்ற சட்ட த்திற்கு ஸ்பானிக் வாக்காளர்களில் பெரும்பாலானோர் ஆதரவு அளித்தனர். எனவே கடந்த 2013 ல் காங்கிரஸ், குடியுரிமைக்கு வழி செய்யும் சட்ட நடவடிக்கையைக் காங்கிரஸ் மேற்கொண்டது . அந்தச் சட்ட முன்வரைவு செனட்டை கடந்தாலும் பாராளுமன்றத்தில் முடங்கியது.