என்னை பதவி நீக்கம் செய்தால் அமெரிக்கா பொருளாதாரம் சீரழியும்….டிரம்ப்

வாஷிங்டன்:

‘‘என்னை பதவி நீக்கம் செய்தால் அமெரிக்கா பொருளாதாரம் சீரழியும்’’ என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஆபாச நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் குற்றம் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்ப்பின் வக்கீல் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து சமரசம் செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் கோஹன் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டள்ளார். டிரம்ப் கூறியே தான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குரல் எழுந்துள்ளது.
மேலும், டிரம்பின் முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் வங்கிமோசடி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து டிரம்ப் ஒரு பேட்டியில் கூறுகையில்,‘‘ தன்னை பதவி நீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும். அனைவரும் ஏழைகளாகி விடுவார்கள். அனைத்து வேலையையும் சரியாக செய்யும் ஒருவரை எப்படி பதவி நீக்கம் செய்ய முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.