தலைவராக தேர்வு: பூரி ஜெகன்நாத் சாமியாரிடம் ஆசி பெற்றார் ராகுல்

அகமதாபாத்

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, நவசார்ஜன் பகுதியில் உள்ள ஜெகன்னாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள சாமியாரிடம் ஆசியும் பெற்றார்.

குஜராத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து குஜராத்தில்  பூரி ஜகன்நாத் கோவிலிலுக்கு சென்று சாமி கும்பிட்ட ராகுல்காந்தி அங்குள்ள சாமியாரிடம் ஆசி பெற்றார்.