35 செவிலியர்களுக்கு ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது….ஜனாதிபதி வழங்கினார்

டில்லி:

சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

இந்த வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 35 பேருக்கு விருதுகளை வழங்கினர்.