அம்பேத்கர் நினைவு தினம்: சிலைக்கு குடியரசு தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை

டில்லி:

ன்று சட்ட மாமேதை அம்பேர்கர் நினைவு தினம். அதையொட்டி,  பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது  சிலைக்கு  குடியரசு தலைவர், துணைத்தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சென்னையில், அப்பேர்கர் மணி மண்டபத்தில் அரசியல் கட்சியிர், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அம்பேர்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் டில்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள  அம்பேத்கர் சிலை மற்றும் அதனை சுற்றி  வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு வந்து மலர் தூவி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.