டில்லி

நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இந்த 2019 உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் இடைக்கால நிதிநிலைக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த இரு அவைகளின் கூட்டு கூட்டத்தின் முதல் நாளான இன்றைய கூஉட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது உரையாற்றி வருகிறார்.

ஜனாதிபதி தனது உரையில், “மத்திய அரசின் முக்கிய கொள்கை சாமானிய மக்களின் வாழ்வு மாற வேண்டும் என்பதே ஆகும். மத்திய அரசு ஊழலற்ற இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. பல கோடி மக்கள் மருத்துவ காப்பீடு மூலம் பயன் அடைந்துள்ளனர். மத்திய அரசு மக்களின் ஆரோக்யத்தை காப்பதை முக்கிய கடமையாக கொண்டுள்ளது. இந்திய மக்களுக்கு இது ஒரு முக்கியமான ஆண்டாகும்.

சுமார் 6 கோடி மக்கள் இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தினால் பயன்பெற்றுளனர். நாடெங்கும் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்துள்ளது. மின்சார வசதி அனைத்து கிராமங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி திட்டங்களின் கீழ் நான்கு ஆண்டுகளில் சுமார் 1 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.