புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

sunil

தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வரும் ஓம் பிரகாஷ் ராவத் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிய உள்ளது. ஓம் பிரகாஷ் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையரசு குடியரசு தலைவர் நியமிப்பது வழக்கம். அதன்படி இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இம்மாதம் இறுதியில் மத்தியபிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுனில் அரோரா டிசம்பர் மாதம் 2ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

1980ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற சுனில் அரோரா நிதி, ஜவுளி மற்றும் திட்டக்குழு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி உள்ளார். அதுமட்டுமில்லாமல் உள்நாட்டு விமான போக்குவரத்து துறையின் இணைச் செயலாளராகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பு தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் சினில் அரோராவிற்கு உள்ளது.