கஜா புயல் பாதிப்பு: தமிழக முதல்வரிடம் விசாரித்த ஜனாதிபதி கோவிந்த்

டில்லி:

மிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுளள கஜா புயல் பாதிப்பு நாடு முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புயல் பாதிப்பு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போனில் தொடர்பு கொண்டு விசாரித்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல்,  டெல்டா மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவித்து உள்ளது. நாகப்பட்டினம், திரு வாரூர், தஞ்சாவூர் புதுக்கொட்டைஎன்றுபல பகுதிகளில் மக்கள் தங்களின் வீடு மற்றும் விவசாய நிலத்தை இழந்து, அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கஜா புயல் காரணமாக சுமார் 1,17,624 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், 1 லட்சத்துக்கும் அதிகமான மாரங்கள் வேரோடு சாயந்து உள்ளது, ஆயிரக்கணக் கான மின் கம்பங்கள், சுமார் 88,102 ஹெக்டேர் பயிர்களை நாசம் செய்துள்ளது. மேலும் 46 உயிர்களையும் பலி வாங்கி உள்ளது.

தற்போது புயல் பாதித்த பகுதிகளிலும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில்  கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார்.

இதுகுறித்து ராஷ்டிரபதிபவனின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதில் பதிவிடப்பட்டு உள்ளது. அதில்,  ‘முதல்வர் எடப்பட்டி பழனிசாமியிடம் கஜா புயல் பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்தேன். கஜாபுயலால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும்’என்று குறிப்பிட்டுள்ளார்.