Random image

ராஷ்டிரபதி பவனில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில் உபயோகம்

டில்லி:

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், குடியரசு தலைவர் மாளிகை யிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு உபயோகப்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில் உபயோகப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கை உலகின் பல நாடுகளும் தடை செய்வது மற்றும் அதன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்திய அரசும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில் தடை விதித்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், தமிழக அரசும் தடை விதிப்பதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், பசுமையை போற்றும் வகையில், குடியரசு தலைவர் மாளிகையிலும் பிளாஸ்டிக் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் பசுமை போற்றும் வகையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 25ந்தேதி முதல் இந்த பதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக மோனோகிராம் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுபோல ராஷ்டிரபதி பவனில் உள்ள முகல் தோட்டத்தில் ஏராளமான செடிகள் மற்றும் பல வகையான பிரம்பு மரங்கள் நடப்பட்டுள்ளன. பசுமையை வளர்க்கும் விதமாக ராஷ்டிரபவன் மாளிகையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.