அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு : ஜனாதிபதி உத்தரவு

டில்லி

த்திய நிதி அமைச்சர் பொறுப்பு அருண் ஜெட்லிக்கு ஒப்படைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாஜகவின் மத்திய அரசில் அருண் ஜெட்லி நிதி அமைச்சர் பொறுப்பை நிர்வகித்து வந்தார்.   அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது.   அதனால் கடந்த மே 14ஆம் தேதி முதல்  அவர் மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்தார்.  அப்போது அமைச்சர்  பியூஷ் கோயல் நிதி அமைச்சகத்தை கூடுதலாக கவனித்து வந்தார்.

தற்போது அவருக்கு உடல்நிலை சரியாகி உள்ளதால் அவருக்கு மீண்டும் நிதி மற்றும் கார்பொரேட் விவகாரத்துறையை ஒதுக்குமாறு  ஜனாதிபதிக்கு பிரதமர் பரிந்துரை செய்தார்.  அந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், ”பிரதமர் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் நிதித்துறை அமைச்சகம் மற்றும் கார்ப்பொரேட் விவகாரத்துறை அமைச்சகம் ஆகிய பொறுப்புக்களை திரு அருண் ஜெட்லி கவனிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.