மகளுடன் செல்ஃபி எடுக்கும் புதிய மொபைல் ஆப் ஒன்றை குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்தார்.

ஹரியானா மாநிலம் ஜிந்து மாவட்டம் பிபிபூர் கிராமத்தைச் சேர்ந்த  சுனில் ஜக்லான்,  அப்பகுதி பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். இவர்  கடந்த 2015ம் வருடம் பெண்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை  அறிமுகப்படுத்தினார். அதோடு பெண்கள் உதவியுடன் கிராமத்தில் பல திட்டங்களை செயல்படுத்தினார்.

இந்த சமூகத்தில் பெண் குழந்தை தவிர்க்கப்படுவதும், பால் இனம் அறிந்து கருவிலே அழிக்கப்படுவதும் நடப்பதை  தடுக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டார்.

இதையடுத்து  மகளுடன் செல்ஃபி என்ற புதிய ஆப்பை உருவாக்கியிருந்தார். அந்த ஆப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று துவக்கி வைத்தார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் கூறுகையில், பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்கள் தங்களது மகளுடன் ஒரு செல்ஃபி எடுத்து இந்த ஆப்பில் பதிவிடுங்கள்.

எல்லோரும் இதைச்  செய்தால் தான் இந்த திட்டம் வெற்றி பெறும். பெண் சிசிவை கருவிலேயேஅழித்தல் மற்றும் பாலின தேர்வுக்கு எதிரான இந்த திட்டம் உலக முழுவதும் பரவ வேண்டும். இது ஒரு இயக்கமாக மாற வேண்டும். அப்போது தான் பாலின ஏற்றத்தாழ்வு விகிதம் குறையும்” என்று குடியரசு தலைவர் பிரணாப் தெரிவித்துள்ளார்.