வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

டில்லி:

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பல மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.

புகைப்படம் உதவி: ஏஎன்ஐ…நன்றி

You may have missed