பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

டில்லி:

கைத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிக்கொள்வதாகவும்,  தியாகத்தின் பரிசுத்தத்தைக் கொண்டாடுவதே பக்ரீத் பண்டிகை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் இணைய அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றுவோம் என்று பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

நம் நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்தார். மேலும்,  நமது சமுதாயத்தில் இரக்கமும், சகோதரத்துவமும் பக்ரீத் நாளில் அதிகரிக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.