முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதலாண்டு நினைவுநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர்  மரியாதை

டில்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள  ”சதைவ் அடல்” வாஜ்பாய் நினைவிடத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் வாஜ்பாய் வளர்ப்பு மகள்  உள்பட ஏராளமானோர் மலர் அஞ்சலி மரியாதை செலுத்தினர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை
பிரதமர் மோடி மரியாதை
உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை