டில்லி:

னாதிபதி ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் நாடுகளுக்கு செல்கிறார்.

வரும் 11ந்தேதி டில்லியில் இருந்து புறப்படும் ராம்நாத், முதலில் மொரிசியல் செல்கிறார். அங்கு 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்யும் அவர்,  12-ந்தேதி மொரிசியஸ் நாட்டின் 50-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து வரும் 14-ம் தேதி மடகஸ்கர் நாட்டுக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்நாட்டு ஜனாதிபதி ஜனாதிபதி ஹெரி ராஜோனரிமாம்பியானினாவை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து 15ந்தேதி அங்கிருந்து புறப்பட்டு இந்தியா திரும்புகிறார்.

இந்தியாவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் மடகஸ்கர் நாட்டுக்கு பயணம் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.