டில்லி:

சாமியார் குர்மித் ராம் ரகீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்ச்குலாவில் வன்முறை வெடித்தது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வன்முறை சம்வங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டரில்‘‘ நாட்டு மக்கள் பொது அமைதியை காக்க வேண்டும். கோர்ட் உத்தரவிற்கு பின்னரும் வன்முறையில் ஈடுபடுவது, பொது சொத்துக்களை சேதப்படுத்துவது போன்றவை கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையாகும். இது கண்டனத்திற்குறியது’’ என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. அமைதி காக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.