Random image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்….ஜனாதிபதி அறிவிப்பு

டில்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இவர் அக்டோபர் 3ம் தேதி பதவியேற்கிறார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை, தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அவர் அக்டோபர் 3ம் தேதி பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.