டில்லி:

ச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் பணியிடத்துக்கு நியமிக்கப்பட வேண்டிய புதிய  நீதிபதிகளை கொலிஜியம் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.  இதை ஏற்று உச்ச நீதிமன்றத் திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

31நீதிபதிகள் கொண்ட இந்திய உச்சநீதி மன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் கூடி ஆலோசனை நடத்தி நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியது.

இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாகல், நீதிபதிகள் நியமனம் தள்ளி போனது. இந்தநிலையில், தற்போது கொலிஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா, பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.

இவர்களில்  நீதிபதி கவாய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகயும், நீதிபதி சூரிய காந்த் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர். அதுபோல, நீதிபதி அனிருத்தா போஸ் தற்போது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், போபண்ணா கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர்.