டெல்லி: ஏசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர்  நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தனது டிவிட்டர்  பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்த திருவிழா அமைதியையும் செழிப்பையும் வளர்க்கிறது, சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவுகிறது என்று நம்புகிறேன்

அன்பு, இரக்கம் மற்றும் தர்மம் பற்றிய கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவோம், நமது சமூகம் மற்றும் தேசத்தின் நலனுக்காக நம்மை அர்ப்பணிப்போம் என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, வெளியிட்ட டிவிட்டர் வாழ்த்துச்செய்தியில், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் கொள்கைகளும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தைத் தருகின்றன. அவருடைய பாதை ஒரு நியாயமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழியைக் காட்டட்டும். எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,  இந்த திருவிழா உங்கள் வீடுகளுக்கும் இதயங்களுக்கும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.