டில்லி:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை மறுதினம் (12ந்தேதி) அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு தலைவர் கோவிலுக்கு வரும்  நேரம்,  பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

2நாள் பயணமாக  வெள்ளிக் கிழமை சென்னை வரும் குடியரசுத் தலைவர், அன்று மாலையே அத்தி வரதரை தரிச்சி காஞ்சிபுரம்ம் வருகை தர இருப்பதாக கூறப்படு கிறது. அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை,  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையாநாயுடுவும் அத்திவரதரை தரிசிக்க வருகை தருகிறார்.  இதையடுத்து, குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தரிசனம் செய்யும் நேரத்தில், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், நாளை (வியாழக்கிழமை) மட்டும்,ஆனி கருட சேவையை முன்னிட்டு  காலை 5 மணியில் இருந்து  மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.