Random image

காந்தி அடிகள் 150 ஆம் பிறந்த தின இலச்சினை வெளியீடு

டில்லி

காந்தி அடிகளின் 150ஆம் பிறந்த தின இலச்சினையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.

இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதலொரு வருடத்துக்கு காந்தி அடிகளின் 150 ஆம் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.   இந்த விழா கொண்டாட்டம் குறிந்த ஆலோசனைக் கூட்டம் கடந்த மே மாதம் ஜனாதிபதி தலைமையில் நடந்தது.   அந்த கூட்டத்தில் விழா தொடர்பாக 92 யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.   அதில் 32 யோசனைகள் ஒப்புக் கொள்ளப்பட்டன.

இந்த விழா தொடர்பாக இணைய தளம் ஒன்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தொடங்கி வைத்தார்.   அப்போது காந்தி 150 ஆம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்த இலச்சினையை அவர் வெளியிட்டார்.   இந்த இலச்சினை ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள், ஏர் இந்தியா விமானங்கள், மாநில அரசு பேருந்துகள், அரசு இணைய தளங்கள், அலுவலகங்கள், உள்ளிட்ட பல இடங்களில் இந்த இலச்சினை உபயோகப்படுத்தப் பட உள்ளது.

இந்த இணைய தளத்தில் காந்தி அடிகள் சம்மந்தப்பட்ட பல்வேறு தகவல்கள் ஏற்றப்பட உள்ளன.   இவைகளை அனத்து அமைப்புக்களும் தனியாரும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுளது.   அத்துடன் இது தொடர்பான தகவல்களையும் யாரும் பதிவேற்றலாம் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.