மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர மத்திய அரசு திட்டம்

டில்லி

பாராளுமன்ற மட்டும் சட்டமன்ற தேர்தலை ஒன்றாக நடத்தை சில மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பாராளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என அரசு பலமுறை தெரிவித்துள்ளது.   வரும் 2019 ஆம் வருடம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது.    ஆனால் பல மாநிலங்களில் அந்த நேரத்தில் சட்டசபையின் ஆயுட்காலம் முடிவடையாமல் உள்ளது.   ஒரு சில மாநிலங்களில் அதற்கு முன்போ அல்லது பின்போ முடிவடைகிறது.

எனவே அரசு இது குறித்து இரு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.    அதன்படி  நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் முன்பே சட்டமன்ற ஆயுட்காலம் முடிவடையும் மாநிலங்களை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.    பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு ஆயுட்காலம் முடியும் சட்டசபைகளை கலைத்து விட்டு ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நட உத்தேசித்துல்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டி இருக்கும்.   இந்த மாநிலங்களின் சட்டமன்ற ஆயுட்காலம் டிசம்பருடன் முடிவடைகின்றது.   நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டால் தேர்தல்கல் ஒரே நேரத்தில் நடைபெறும்.

ஆனால் மகாராஷ்டிரா  மற்றும் அரியானாவுக்கு அடுத்த வருடக் கடைசியில் தேர்தல் நடத்த வேண்டி வரும்.    அதனால் அம்மாநிலங்களின் சட்டப்பேரவையை கலைக்க நேரிடலாம்.

தற்போதைய நிலையில் சிக்கிம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, அருணாசலப் பிரதேசம் மற்றும் ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்த முடியும்.

You may have missed