திருவனந்தபுரம்

யர்நீதி மன்ற தீர்ப்புக்களை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வழந்த வேண்டும் என ஜனாதிபதி ராம் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள உயர்நீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டம் நேற்று கேரளா மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடை பெற்றது.   இந்த விழாவை ஜனாதிபதி ராம்கோவிந்த் துவக்கி வைத்து உரையாற்றினார்.    அவருடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஜனாதிபதி தனது உரையில், “உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நகல்கள் 24 மணியிலிருந்து 36 மணி நேரத்துக்குள் சம்மந்தப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும். பல்வேறு மொழிகள் பேசும் நம் நாட்டில் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கப்படுகின்றன.   இதனால் தீர்ப்பில் உள்ள பல முக்கிய விவரங்கள் பலரும் புரியாமல் போய் விடலாம்.    இந்த தீர்ப்பு விவரங்களை அறிந்துக் கொள்ள ஒரு வழக்கறிஞரை நாடுவதன் மூலம் மேலும் கால விரையமும் செலவும் உண்டாகிறது.  இதைத் தவிர்க்க தீர்ப்புக்களை அந்தந்த மாநில மொழியில் மொழி பெயர்த்து மனுதாரர்களுக்கு அளிக்க வேண்டும்.

அவசரமான சந்தர்ப்பங்கள் தவிர மற்ற நேரங்களில் வாய்தாவை அனுமதிக்கக் கூடாது.  விரைவில் வழக்கை முடிக்க வேண்டும்.   சமூகத்தில் உள்ள பின் தங்கியவர்களும் நலிவுற்றோரும் இந்த வாய்தாவினால் ஏற்படும் கால தாமதத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.   வழக்கை இழுத்தடிக்க ஒரு வழியாக பலரும் வாய்தாவை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்” என கூறி உள்:ளார்.