8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கிய இந்திய ஜனாதிபதி

டில்லி

ந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மூன்று நாடுகளுக்கான 8 நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கி உள்ளார்.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சைப்ரஸ், பல்கேரியா, செக்கோஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ளார்.  சுமார் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் இன்று டில்லியில் இருந்து கிளம்பி உள்ளார்.   இந்த சந்திபின் போது அவர் இந்த மூன்று நாட்டு தலைவர்களுடன் பொருளாதாரம் உள்பட பல துறைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இன்று டில்லியில் இருந்து கிளம்பும் அவர் 4 அம் தேதி வரை சைப்ரஸ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்கிறார்.   அப்போது  அவர் அநாட்டு அதிபர் நிகோசுடன் சந்திப்பு நிகழ்த்துகிரார்.  அங்கிருந்து அவர் பல்கேரியா செல்கிறார்.  ராம்நாத் கோவிந்த் இந்நாட்டுக்கு செல்லும் இரண்டாம் குடியரசுத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்துக்குப் பின் அவர் செக்கோஸ்லோவேகிய குடியரசுக்கு செல்கிறார்.  அந்த நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் ராம்நாத் கோவிந்த் வர்த்தகக் கூட்டம் ஒன்றில்கலந்து கொள்கிறார்.    இந்த விவரங்களை ஜனாதிபதியின் பத்திரிகை செயலர் தெரிவித்துள்ளார்.