டெல்லி: பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றும்,  விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை பற்றி மாநிலத்தின் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.