ன்னியாகுமரி

ராண்டு காலம் நடைபெற உள்ள கன்னியாகுமரி விவேகானந்தா மண்டப பொன்விழாவைச் செப்டம்பர் 11 அன்று ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் மண்டபம் முக்கடலும் கூடும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் பிறந்தவர் ஆவார். இவருடைய இயற்பெயர் நரேந்திரன் ஆகும். கடந்த 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரி வந்த அவர் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையைக் கண்டதும் அவரை அங்கு யாரோ அழைப்பது போல் தோன்றி உள்ளது. கடலில் இறங்கி நீந்தி அவர் பாறையை அடைந்தார்.

அங்கு அவர் 1892 ஆம் ஆண்டு டிசம்பர் 25, 26, மற்றும் 27 ஆகிய தேதிகளில் தவம் செய்தார். குமரி அன்னை அவருக்கு அங்கு ஞானம் வழங்கினார். அவர் தவம் செய்த அந்தப்பால் தற்போது அவருடைய நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் எழுப்பப்பட்டு தற்போது 50 வருடம் நிறைவு பெற உள்ளது. இந்த மண்டப அமைப்புப் பணியில் 400 சிற்பிகள் இடம் பெற்றிருந்தனர். இந்த மண்டபத்தில் ஏழரை அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன விவேகானந்தர் சிலை உள்ளது.

கடந்த 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் அப்போதைய ஜனாதிபதி வி வி கிரி மண்டபத்தைத் திறந்து வைத்தார். வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இந்த மண்டபத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் தொடக்க விழா நடைபெறுகிறது. ஓராண்டு காலம் நடைபெற உள்ள இந்த விழாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்க உள்ளார்.