கொரோனா குறித்து அறிய சீனாவுக்கு செல்கிறது அமெரிக்க குழு! டிரம்ப் தகவல்

வாஷிங்டன்:

கொரோனா தாக்கம் குறித்து அறிய சீனாவுக்கு செல்கிறது அமெரிக்க குழு செல்லும் என்று கூறிய அதிபர்  டிரம்ப், அவர்களை சீன அரசு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், அங்கு அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தாத நிலையில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மாபெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் சீனா மீது கடும் கோபத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்,  ‘‘கொரோனா பலியில் சீனாதான் நம்பர் ஒன். அதன் அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை’’ என கூறியுள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், கொரோனா பலி எண்ணிக்கையில் நாம் முதல் இடத்தில் இல்லை. சீனாதான் முதல் இடத்தில் உள்ளது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சுகாதார நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ள  இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின்  போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், சீனாவில் மட்டம்  குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது நம்பும்படி இல்லை.  இதுகுறித்த, அந்நாட்டு ஊடகங்களுக்கு உண்மை தெரியும், ஆனால், அதை  ஊடகங்கள் வெளியிட விரும்பவில்லை. ஏன்? ஒருநாள் நான் இது பற்றி விளக்குவேன்.

கொரோனா விஷயத்தில் சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. கொரோனா  வைரஸை திட்டமிட்டே சீனா பரப்பியதாக என்பது குறித்து விசாரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்த உண்மை நிலவரம் அறிய அமெரிக்க குழுவினரை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழுவினரை சீனா அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.