ஜனாதிபதி வேட்பாளர்: பாஜ வேட்பாளருக்கு தினகரனும் ஆதரவு

--

சென்னை,

பாரதியஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா சார்பாக ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளராக இருக்கும் டிடிவி தினகரனும், பாரதியஜனதா வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

 

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆதரவு அளிப்பதாக முதல்வர்  எடப்பாடி தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து  அமித்ஷா வேண்டிக்கொண்டதற்கிணங்க தனது அணி ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தற்போது பா.ஜ.க. குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்-க்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் உத்தரவின் பேரில் பா.ஜ.க. குடியரசுத்தலைவர் வேட்பாளரை ஆதரிப்பதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.