டில்லி:

னாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று தமிழகத்தைச் சேர்ந்த தேர்தல்  பத்மராஜன் உட்பட 7 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம்  ஜூலை மாதம் 24-ந்தேதி யுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.  தேர்தல் நடத்தும் அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் டெபாசிட் தொகை ரூ.15 ஆயிரமாகும். பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறுவோர் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற முடியும்.

35 வயது நிறைவு பெற்ற இந்தியர் யார் வேண்டுமானாலும்  ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம்.

போட்டியிடுபவரின் வேட்புமனுவை, ஓட்டளிக்க தகுதியுடைய 50 பேர் (எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள்) முன்மொழியவும், வேறு 50 பேர் வழிமொழியவும் வேண்டும்.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 28-ந் தேதியாகும்.

ஜனாதிபதி தேர்தலுக்காக முதல் நாளில் 7 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளது. இதற்கு போட்டியாக காங்.தலைமையில் எதிர் கட்சிகளும் ஒன்று இணைந்து வேட்பாளரை நிறுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.