டில்லி:

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் , அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார்ஷிண்டே போட்டியிடலாம் என்று ஒரு தகவல் உலவுகிறது.

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17 ல் நடைபெற உள்ளது. நேற்று பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடப்போவதக அறிவிக்கப்பட்டது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஒரு மித்த கருத்து ஏற்படுத்துவதாக கூறிவிட்டு பா.ஜ., தன்னிச்சை யாக முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அல்லது லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் நிறுத்தப்படலாம் என்று ஒரு தகவல் உலவுகிறது.

ஆனால் சுஷில்குமார் ஷிண்டே, அப்படி ஒரு தகவல் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.