டில்லி,

னாதிபதி தேர்தல் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் ராகுல்காந்தி பேச இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக நிதிஷ்குமாரின் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளரான மீராகுமாருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா வேட்பாளரான கோவிந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக பீகார் முதல்வர்  நிதிஷ்குமார் அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம்  ஜூலை மாதம் 24-ந்தேதி யுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14ந்தேதி தொடங்கியது.

அதையடுத்து பாரதியஜனதா வேட்பாளராக ஒரிசா முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.  எதிர்க்கட்சிகள் சார்பாக  முன்னாள்  பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார்வே நிறுத்தப்பட்டுள்ளார்.

இரு வேட்பாளர்களும் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து, மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்நிலையில், பாரதிய ஜனதாவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையிலான  எதிர்க்கட்சி அணியில் இருந்த நிதிஷ்குமார், ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதாவுக்கே தனது ஆதரவு என அறிவித்திருந்தார். இது எதிர்க்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு காரணமாக, தற்போது ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், பீகார் மாநில கவர்னராக, மாநில நலனுக்கு ஆதரவாக இருந்தவர் என்பதை கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பி உள்ள ராகுல்காந்தி, நிதிஷ்குமாருடன் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அப்போது இருவரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து  பேசுவார்கள் என்றும், அதன் காரணமாக நிதிஷ்குமார் மீராகுமாருக்கு ஆதரவு அளிக்க முன்வரலாம் என கூறப்படுகிறது.