வங்கி கணக்கி மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

aadhaar

வங்கி கணக்குகள் தொடங்கவும், சிம் கார்டுகள் வாங்கவும், அரசின் நலத்திட்டங்கள் பெறவும் ஆதார் எண் கட்டாயம் எனனும் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தனது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நலத்திட்டங்கள் பெற ஆதார் எண் கட்டாயம், ஆனால் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் கூறியது.

இருப்பினும், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத்திற்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருங்கள் கொண்டுவர பிரதமர் நரேதிர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் புதிதாக சிம்கார்டுகள் பெறவும், வங்கி கணக்குகள் தொடரவும் இனி ஆதார் எண் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.