“த்த்தூ…” விஜயகாந்துக்கு ப்ரஸ் கவுன்சில் சம்மன்

டில்லி:

த்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு ப்ரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.  நேரில் ஆஜராக அவ காசம்    கேட்டுக்கொண்டுள்ளார் விஜயகாந்த்.

download (5)

பொதுவெளியில் தனது கட்சிக்காரர்களை அடிப்பது உதைப்பது கொட்டுவது என்று அநாகரீகமாக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பத்திரிகையாளர்களிடமும் அதே போல அநாகரீகமாக நடந்துகொண்டார். த்தூ என்று துப்பினார்.

இதையடுத்து,  இந்திய பத்திரிகையாளர் மன்றம் ( ப்ரஸ் கவுன்சில் ஆப் இந்தியா) விஜயகாந்த் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளது.

தான் ஆஜராக அவகாசம் கேட்டு விஜயகாந்த் தெரிவித்ததை அடுத்து, ப்ரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அவகாசம் அளித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி