சென்னை

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு முழுவதுமாக தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இதோ

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையும் ஒன்றாகும்.  இங்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இது குறித்து டிவிட்டரில் முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அது குறித்த விவரங்கள் இதோ

கொரோனா பாதிப்பு உள்ளோர் கண்டறியப்பட்ட வீடுகள் உள்ள தெருக்கள் மூடப்பட்டு இங்கு நுழையவும் வெளியேறவும் தடை  விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தெருக்களில் நடமாட்டங்கள் மிகவும் தீவிர கண்காணிப்பில் உள்ளன.  அத்துடன் தினசரி மருத்துவ முகாம்கள் நடத்தி பாதிக்கப்படோர் உடனடியாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்.

தேவையான அளவுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் சில இடங்களில் மிகவும் வறுமையானோர் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தினமும் பால் மற்றும் ரொட்டி அளிக்கப்படுகிறது   பகுதிகள் முழுவதும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.  தினமும் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஜுரம் போன்றவை உள்ளதா எனக் கண்காணிக்கப்படுகிறது.

கொரோனா அறிகுறிகள் உள்ளோரிடம் இருந்து உடனடியாக மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன. தினமும் ஆட்டோக்கள் மூலம் இங்குள்ள மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு பேச்சு ஒலிபரப்ப படுகிறது.  அத்துடன் அறிகுறி உள்ள மக்களை மருத்துவ முகாமுக்குச் செல்ல அறிவுரைகளும் ஆட்டோவில் கூறப்படுகின்றன.

இதில் மிகவும் சிறப்பான இரு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

  1. பகுதியில் உள்ள தொண்டர்கள்,   இப்பகுதியில் வசிக்கும் சிலர் கண்டறியப்பட்டு அவர்கள் தினம் மளிகை மற்றும் உள்ள பொருட்கள் வழங்கும் ஊழியர்களுக்கு உதவக் கேட்டுக் கொள்ளபடுள்ளனர்.  அவர்கள் ஜுரம் உள்ளிட்ட அறிகுறிகள் குறித்த கணக்கெடுப்பும் நடத்துகின்றனர்.
  2. இந்த பகுதியின் நடமாட்டம் முழுமையாக ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

 மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருந்துகள்  அளிக்கப்படுகின்றன. குறிப்பாக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளோருக்கு இரு மாத மருந்துகள் முன்கூட்டியே அளிக்கப்படுகின்றன. அத்துடன் மருத்துவக் குழு இந்த பகுதிகளில் சென்று  கர்ப்பம் தரித்த பெண்கள் உள்ளிட பலரையும் சோதித்து வருகிறது..