சென்னையில் பெட்ரோல் ரூ. 77.58க்கும், டீசல் ரூ. 69.81க்கும் விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 77.58-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 69.81-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய விலை நிர்ணையம் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை குறைந்தும் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படும். அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ. 77.58-ஆகவும், டீசல் லிட்டருக்கு விலை மாற்றமின்றி ரூ. 69.81-ஆகவும் விற்பனை செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல் விலை குறைந்தும், 9வது நாளாக டிசல் விலையில் மாற்றம் ஏதுமின்றியும் விற்பனை தொடர்வது குறிப்பிடத்தக்கது.