நாகர்கோவில்,

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் விலைவாசி குறைந்துள்ளது என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில், பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி உள்ளனர் வணிகர்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜிஎஸ்டி அமல்படுத்தி உள்ளதால் விலைவாசி குறைந்துள்ளதாக காமெடி செய்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜனதா மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பா.ஜனதா ஒரு முதன்மையான கட்சியாக வளரும். திராவிட கட்சிகளின் காலம் தமிழகத்தில் முடிவுக்கு வந்து விட்டது. இனி பா.ஜனதாவின் காலம் தான் என்றார்.

ஜி.எஸ்.டி. வரி மற்றும் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பற்றி வேண்டுமென்றே பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள். இது பெரிய பிரச்சினையே அல்ல. ஒரு வாரம் பொய் சொல்லலாம், ஒரு மாதம் பொய் சொல்லலாம். எப்போதும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. உண்மை எப்படியும் வெளியே வந்து விடும் என்றார்.

மேலும்,  ஜி.எஸ்.டி. அறிவிப்பால் விலைவாசி குறைந்துள்ளது என்றும் அதிரடியாக கூறினார்.

தியேட்டர் ஊழியர்களின் போராட்டத்துக்கும், ஜி.எஸ்.டி.க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தமிழக அரசின் உள்ளாட்சிக்கான கேளிக்கை வரியை கண்டித்து தான் தியேட்டர் உரிமையாளர்கள் போராடி வருகிறார்கள் என்றும் கூறினதார்.

ஜிஎஸ்டி அமல்படுத்தி இன்னும் முழுமையாக ஒருவாரம்கூட முடிவடையாத நிலையில் மத்திய அமைச்சரின் பேச்சு….. நகைச்சுவையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று செய்தியாளர்கள் கூறி சென்றனர்.