21 நாட்கள் லாக் டவுனுக்கு ஒவ்வொருவரும் தரும் விலை அதிகம்: பிரஷாந்த் கிஷோர் கருத்து

டெல்லி: 21 நாட்கள் லாக் டவுனுக்கு ஒவ்வொருவரும் தரும் விலை அதிகம் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறி இருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து இருக்கிறது. நள்ளிரவு 12 முதல் ஏப்ரல் 14 வரை இந்த தடை அமலில் இருக்கும்.

அனைவரும் இந்த ஊரடங்கை ஏற்று, அதற்கு  ஒத்துழைப்பு தந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந் நிலையில், இந்த 21 நாள் லாக் டவுனுக்காக ஒவ்வொருவரும் கொடுக்கும் விலை என்பது மிக அதிகம் என்று தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: இந்தியாவை பூட்டுவதற்கான முடிவு ஒருவேளை சரியானதாக இருக்கலாம், ஆனால் 21 நாட்கள் சற்று நீளமாக இருக்கலாம்.

ஆனால் இதன் பின்னால் ஒருவர் செலுத்தும் விலை என்பது மிக அதிகம். வைரசில் இருந்து ஏழை மக்களை காக்கும் ஏற்பாடுகள் குறைவே. இந்த லாக் டவுனில் இனி வரும் நாட்கள் கடினமானதாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார்.