சமையஸ் காஸ் விலை நள்ளிரவு முதல் உயர்வு

டில்லி:

சமையல் காஸ் சிலிண்டர் விலை சர்வதேச சந்தையை மையப்படுத்தி அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.

மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு முதல் சமையல் காஸ் விலை 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் 1 ரூபாய் 76 காசுகள் உயர்த்தப்படுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

You may have missed