கொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு

டில்லி

கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.   நேற்று வரை 9.07 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர் 23700க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

கொரோனாவுக்கான சிகிச்சைக்காக இந்தியாவின் கிள்ன்மார்க் ஃபார்மா நிறுவனம்  ஃபெவிபிரவிர் என்னும் மருந்தை ஃபெபிஃப்ளூஎன்னும் பெயரில் மாத்திரையாக அறிமுகம் செய்தது.  இது இந்தியாவில் முதலில் கொரோனா தொற்றுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட முதல் மருந்தாகும்.

இந்த மாத்திரையின் விலை அறிமுகம் செய்யப்பட்ட போது ஒரு மாத்திரை ரூ.103 என நிர்ணயம் செய்யப்பட்டது.    தற்போது இந்நிறுவனம் மாத்திரையின் விலையில் 27% குறைத்துள்ளது.  இப்போது இந்த மாத்திரை விலை ரூ.75 என மாற்றப்பட்டுள்ளது  இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.