தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை

ன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏறுமுகமாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டின. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறும் என மக்கள் அச்சமடைந்தனர். எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா என்ணெய் விலையை ஒட்டி தினமும் விலையை மாற்றியதால் மேலும் விலை உயர்வு ஏற்பட்டு மக்கள் கடும் துயரம் அடைந்தனர்.

அதன் பிறகு சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டிசல் விலை சிறிது சிறிதாக குறையவே மக்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர். ஆனால் அந்த ஆறுதலும் தற்போது மீண்டும் பறிபொக ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் ஆகும்.

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையிலும் லிட்டருக்கு 31 காசுகள் உயர்வு ஏற்பட்ட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.65 எனவும் ஒரு லிட்டர் டீசல் ரூ.69.14 எனவும் விற்கப்படுகிறது.