மாஸ்க் அணிந்து வந்தால் மலிவாகக் காய்கறி :  கடைக்காரரின் புதிய ஆஃபர்

திருப்பூர்

திருப்பூரில் ஒரு காய்கறிக் கடைக்காரர் முக கவசம் அணிந்து வந்தால் விலைக் குறைவு என அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்

குறிப்பாக வெளியே செல்வோர்  முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

ஒரு சில மாநிலங்களில்  முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு அணியாமல் வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

முகக் கவசம்  அணிவதை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் பழைய மார்க்கெட்டில் உள்ள காயகறிக் கடைக்காரர் ஒருவர் முகக் கவசம் அணிவோருக்கு விலை குறைவு குறித்து உரத்த குரலில் அறிவிப்பு அளித்து வருகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது

நம் வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ :