உள்விழி லென்சுகள், டயாலிசிஸ் திரவம், காது கேட்கும் கருவி.விலை குறைகிறது

டில்லி

யாலிசிஸ் திரவம், காது கேட்கும் கருவி மற்றும் உள்விழி லென்சுகள் ஆகியவை விலை குறைய உள்ளது.

மக்களுக்குத் தேவையான பல மருந்துகளை அரசு அவசியமான மருந்துகளின் தேசிய பட்டியலில் கொண்டு வந்துள்ளது. இந்த பட்டியலில் ஏற்கனவே மாற்று முழங்கால் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் கொண்டு வரப்பட்ட மருந்துகளின் விலையை அரசின் தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அத்தியாவசியமான மருந்துகள் எளிய விலையில் கிடைக்க இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தற்போது டயாலிசிஸ் திரவம், காது கேட்கும் கருவி, உள்விழி லென்சுகள் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக உள்விழி லென்சுகள், காது கேட்கும் கருவிகள் போன்றவை 59% முதல் 1500% வரை லாபத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையைக் குறைக்கப் பலமுறை கோரிக்கை விடுத்தும் குறைக்காமல் உள்ளது. தற்போது இந்த பொருட்களுக்கான விலைகள் தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயம் செய்ய உள்ளது. இதற்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு சில மருந்துகளை முக்கியமான மருந்துகள் என அறிவித்து அந்த மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்து வந்தது. தற்போது இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆணயம் விலை நிர்ணயம் செய்வதால் விலை குறையும் எனக் கூறப்படுகிறது. இந்த விலைக்கு வருடம் தோறும் 10% விலை உயர்வு அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்த பட்டியலில் புற்று நோய், இருதய நோய், உள்ளிட்டவற்றுக்கான மருந்துகளும் விரைவில் சேர்க்கப்பட உள்ளது..

கார்ட்டூன் கேலரி