பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியார் கைது

--

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அடைக்கனூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). குறி சொல்பவர். இதனால் ஆறுமுகம் வீட்டுக்கு சாமி கும்பிட வெள்ளையம்மாள் அடிக்கடி சென்று வருவார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி மந்திரிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை தலையில் தேய்த்து தன்னிடம் தகாத முறையில் ஆறுமுகம் நடந்து கொண்டதாக ஓமலூர் போலீசில் வெள்ளையம்மாள் ஆறுமுகம் மீது புகார் அளித்தார். இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.