ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் சாமியார் ஆசாராம் பாப்பு மேல்முறையீடு

ஜெய்ப்பூர்:

பாலியல் பலாத்கார  வழக்கில்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரா பாப்பு, தனது தண்டனையை எதிர்த்து ராஜ்ஸ்தான் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு  மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் ஆசாராம் பாப்பு, அங்குள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாமியார் ஆசாராம் பாப்பு  குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு  ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 25-4-2018 அன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இந்த பாலியல் பலாத்கார  விவகாரத்தில் சாமியாருக்கு  உடந்தையாக இருந்ததாக அவரது உதவியாளர்கள்  சரத் மற்றும் சில்பி ஆகியோருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது ராஜஸ்தானில் உள்ள  ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாப்பு, தனக்கு  வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,  கடந்த மாதம் பிரபல சாமியார்  ஆசாராம் பாப்பு மீதான கொலை வழக்கில், அவருக்கு எதிராக சாட்சி கூறியtரின் மகனை ஆசாராம் பாப்புவின்ஆட்கள் கடத்தி சென்ற நிலையில், அவர் ரயில்வே போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.