சென்னை வந்தார் பிரதமர் மோடி: கவர்னர், முதல்வர் உள்பட கூட்டணி கட்சியினரும் வரவேற்பு

சென்னை:

சீன அதிபருடனான சந்திப்பு இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், சீன அதிபரை மாமல்லபுரத்தில் சந்திக்கும் வகையில், இன்று முற்பகல் 11.30 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

விமானநிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

பிரதமருக்கு தமிழக அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் வாசன், பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன் உள்பட  ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பைத் தொடர்ந்து சென்னை விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளம் புறப்பட்டார் பிரதமர் மோடி. இன்று மாலை மாமல்லபுரத்தில் சீன அதிபரை பிரதமர் மோடி சந்திக்கிறார்.