அகமதாபாத்: பிரதமர் மோடி போட்டியிட்ட குஜராத் மாநிலத்தில் உள்ள மணிநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தமிழ் பள்ளி மூடப்படுவதாக, மாநில அரசு அறிவித்து உள்ளது. இது அங்குள்ள தமிழ் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில், 8ம் வகுப்பு வரை குஜராத் மொழி கட்டாயம் என சட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அங்கு செயல்பட்டு வரும் தமிழ் பள்ளிக்கூடங்கள் மூடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் வழிக் கல்வி பயில்வதற்காக தொடங்கப்பட்ட பள்ளிகள் குஜராத்தில் அடுத்தடுத்து மூடப்படுவதால் உடனடியாக தமிழக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.