பிரிட்டனில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் மோடி

லண்டன்:

காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு பிரிட்டனில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்தகொண்டார்.

மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் மோடிக்கு விருந்து அளிக்கிறார்.

அங்கு இரு நாடுகளின் உறவு குறித்து மோடி – மெர்கெல் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பிரதமர் மோடி நாளை இரவு நாடு திரும்புகிறார்.