Random image

தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கணைக்கு மோடி பாராட்டு

டில்லி:

துருக்கியில் நடந்த உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப் பதக்கம் வென்றார். தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து மோடி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தீபா கர்மாகரை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. உலக சேலஞ்ச் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்.

இந்த வெற்றி தங்களின் விடாமுயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு தெரிவித்த பிரதமருக்கு தீபா கர்மாகர் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.