Random image

வாரனாசிக்கு ரூ.937 கோடியில் நலத்திட்டம்…மோடி தொடங்கி வைத்தார்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் அசாம்கரில் 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி மோடி, பின்னர் தனது தொகுதியான வாரணாசியில் ரூ. 937 கோடி மதிப்பிலான 33 நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ முந்தைய ஆட்சி காலங்களில் வாரணாசியில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடக்கவில்லை. மேம்பாட்டு பணிகள் முடக்கப்பட்டிருந்தன. மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் எங்களுக்கு வாக்களித்த பின்னர் வளர்ச்சிப் பாதையில் நடைபோட ஆரம்பித்தது.

கங்கை நதியை தூய்மைப்படுத்த 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 200 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதிய இந்தியாவை படைப்பதற்காக புதிய வாரணாசி உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் கலாசாரமும், பாரம்பரியமும் செழித்திருக்கும்’’என்றார்.